குட்டையில் விழுந்த குட்டி யானை! ஜேசிபி வைத்து மீட்ட வனத்துறை!

வியாழன், 23 நவம்பர் 2023 (12:35 IST)
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்கள பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது.


 
இதனை ரோந்து பணியின் போது அறிந்த வனத்துறை ஆல்ஃபா குழுவினர் உடனடியாக வனசரக அலுவலருக்கு தகவல் அளித்து பின்னர் அங்கு வந்த வன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீர் நிரம்பியிருந்த குட்டையை மட்டம் செய்து யானையை குட்டையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் யானையை ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

யானை விழுந்த குட்டை வனப்பகுதியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வனப்பகுதியை ஒட்டியே குட்டைகள் தோண்டப்படுவதால் வனவிலங்குகள் அடிக்கடி இது போன்ற இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் வனத்துறையினர் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்