மதுபோதையில் தகராறு செய்த மெக்கானிக்; கல்லை போட்டுக் கொன்ற இளைஞர்கள்! – மதுரையில் அதிர்ச்சி!

வியாழன், 30 நவம்பர் 2023 (11:44 IST)
மது போதையில் தகராறு டிராக்டர் மெக்கானிக் தலையில் கல்லை போட்டு கொலை செய்து இளைஞர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை -  தேனி சாலையில் உள்ள அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த டிராக்டர் மெக்கானிக் பாண்டிச் செல்வம் இவர் மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள அரசு பொது சேவை மையத்தின் அருகில் அமர்ந்திருந்த போது அங்கு மது போதையில் அந்த இளைஞர்கள் சிலர் பாண்டி செல்வத்தை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பானதில் மதுபோதையில் இருந்த  இளைஞர்களும் பாண்டி செல்வத்தை அருகிலிருந்த கழிவு நீர் கால்வாய் பள்ளத்தில் தள்ளிவிட்டுள்ளனர். இதில் லேசான காயமடைந்த பாண்டிச்செல்வம் எழுந்திருக்க முயன்ற போது ஆத்திரம் தீராத இளைஞர்கள் அருகில் இருந்த கல்லை தூக்கி மெக்கானிக் பாண்டிச் செல்வத்தின்  தலையில்போட்டதில் பலத்த காயமேற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாண்டி செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

இதை அறிந்த   இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாண்டி செல்வம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வந்த நிலையில் பாண்டி செல்வம் இறந்ததை அறிந்து வந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

உறவினர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியதால் இறந்த பாண்டி செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மீட்க முயன்ற போது பாண்டி செல்வத்தின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மதுரை - தேனி சாலையில் அமர்ந்துசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்வோம் என உறுதி அளித்ததை  தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் இறந்த பாண்டி செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரயாத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து பிரைஸ் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய இளைஞர்கள் யார் ? யார் என்ன விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை சம்பவம் முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது ஜாதி பிரச்சனையால் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா?  என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பாண்டி செல்வத்தின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - தேனி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்