இலங்கை பாராளுமன்றம் முடக்கம்! அதிபர் சிறிசேனா அறிவிப்பு

சனி, 27 அக்டோபர் 2018 (13:54 IST)
தன் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமண்ரத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்திருந்த நிலையில் அதிபர் மைத்ரிபால  சிரிசேனா திடீர் அறிவிப்பை வெளியிடிருக்கிறார்.
அதில் பகல் இன்று 1 மணியில் இருந்து நவம்பர் 16 வரை இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அவர் அறிவித்திருக்கிறார். 
 
இலங்கையில் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக நடந்து வரும் அரசியல் பரமபத விளையாட்டுகளால் அங்கு  அடுத்து என்ன மாதிரியான சூழ்நிலை வரப்ப்போகிறது என கணிக்க முடியாத நிலை நிலவிவருவதாக அரசியல் விமர்சர்கள் கருதுகிறார்கள்.
 
இதெல்லாவற்றிற்கும் பின்புலமாக நேற்று புதிய பிரதமராக பதவியேற்றுள்ள  முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் தற்போதைய அதிபர் மைதிரிபால சிரிசேனா ஆகியோரின் திட்டமிட்ட சதி என்றே செய்திகள் நிலவி வருகிறது.
 
இன்னும் சொல்லப்போனால் தனக்கு எதிராக ஆளுங்கட்சி செயல்படகூடிய நிலையில் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கை பதவியை விட்டு இறக்கும் முயற்சியில் ஓர் சூழ்ச்சி வலையை விரித்திருக்கலாம் எனவும் இந்த விவகாரத்தை நம் பருத்துக் கண்களால் பார்க்கப்பட வேண்டியதிருக்கிறது.
அனைத்திற்கும் மேலாக சிறிது நாட்களுக்கு முன்பு ராஜபக்சே இந்தியாவிற்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்துவிட்ட்டுப் போனது கூட ’ரா’ அமைப்பின் மீது தன்னைகொல்லை முயற்சிப்பதாக ஒரு கட்டுக்கதையை புரளியாகக்கிளப்பிவிட்டு ஊரையும் உலகையும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ராஜபக்சே சுயமாக  தீட்டிய ஒரு சாதுர்யமான அதேசமயம் ஒரு பனங்காட்டு கிழட்டு நரிக்கு ஒப்பான ராஜதந்திரம்  நாடகம் என்றே தோன்றுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்