2000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சனி, 20 மே 2023 (12:34 IST)
நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மாநில அரசுகளிடம் ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 
 
இதற்கு பல அரசியல்வாதிகளிடமிருந்து கண்டன கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு இது குறித்து கூறிய போது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுமுன் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்