ராகுல் பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலு! எச்.ராஜாவை தூக்கி சாப்பிட்டதாக நெட்டிசன்கள் கிண்டல்

வியாழன், 14 மார்ச் 2019 (06:21 IST)
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் பேசிய ஆவேசமான பேச்சை தமிழில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கபாலு மொழி பெயர்த்தார். ஆனால் ஒருசில இடங்களில் அவர் சம்பந்தமே இல்லாமல் மொழி பெயர்த்தது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
 
குறிப்பாக நான் தமிழக மக்களுக்கு மரியாதை தருகிறேன் என்று ராகுல்காந்தி ஆங்கிலத்தில் சொல்ல அதற்கு தங்கபாலு, 'நரேந்திரமோடி தமிழகத்தின் எதிரி' என மொழிபெயர்த்தார். அதேபோல் 'உண்மை ஜெல்லும்' என்று ராகுல் சொல்ல, அதற்கு தங்கபாலு 'உண்மை வெல்லும்' என்று கூறினார். ஆனால் ராகுல்காந்தி மீண்டும் 'உண்மை ஜெல்லும்' என்று கூற திருதிருவென முழித்த தங்கபாலு, 'உண்மை...நரேந்திரமோடி சிறையிலே இருப்பார்' என்று மொழி பெயர்க்க இந்த பேச்சை கேட்டவர்கள் பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தனர்.
 
அதேபோல் ஜம்முகாஷ்மீர் இன்சூரன்ஸ் உரிமையை அம்பானிக்கு கொடுத்துவிட்டதாக ராகுல் கூற, ஜம்மு காஷ்மீரையே அம்பானிக்கு கொடுத்துவிட்டதாக தங்கபாலு மொழி பெயர்த்தார். காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் பிரச்சார கூட்டமே காமெடி கூட்டமாகியதால் நெட்டிசன்கள் படுவேகமாக இதனை கிண்டலடித்து வருகின்றனர். 'சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்த் எச்.ராஜாவையே தங்கபாலு தூக்கி சாப்பிட்டுவிட்டதாக கிண்டலடிக்கப்படுகிறது. இனிமேலாவது தமிழில் மொழி பெயர்க்க ப.சிதம்பரம், குஷ்பு போன்று இரண்டு மொழிகளையும் நன்கு தெரிந்தவர்களை அமர்த்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்