தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் நேற்று வெட்ட வெளிச்சமாகி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் சேர்க்க கூடாது என அதிமுகவினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், கட்சிக்கு துரோகம் செய்த தங்க தமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே... ஜெயலலிதா ஆட்சியை அழிக்க நினைத்த துரோகி தங்க தமிழ்செல்வன்... அம்மா ஆன்மா தங்க தமிழ்செல்வனை ஒரு போதும் மன்னிக்காது என எழுதப்பட்டுள்ளது.