தனது மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், தனக்கும் தனது மகனின் வெற்றிக்கும் செய்த இடைஞ்சல் காரணமாக கடும் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ், தங்க தமிழ்ச்செல்வனை அதிமுக இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் தேனியில் ஓபிஎஸ்க்கு இருக்கும் செல்வாக்கை தகர்க்க தங்க தமிழ்ச்செல்வன் உதவுவார் என்பதால் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுக இணைக்க ஈபிஎஸ் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனாலும் ஓபிஎஸ்க்கு அதிக நெருக்கடி கொடுத்தால் பாஜக மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர வாய்ப்பு இருப்பதால் ஓபிஎஸ் சம்மதத்துடன் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ் தரப்பு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க ஓபிஎஸ் ஒரு நிபந்தனை விதித்திருப்பதாகவும், அவர் அதிமுகவில் இணைந்தால் அவருக்கு மாநில அளவில் என்ன பொறுப்பு வேண்டுமானாலும் கொடுத்து கொள்ளலாம் என்றும் ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளாராம். இதனையடுத்து தங்கதமிழ்ச்செல்வன் விவகாரத்தில் ஈபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.