இந்நிலையில் செயற்குழு கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.
இதனிடையே இதனை விமர்சித்துள்ளார் தங்க தமிழ்செல்வன். அவர் கூறியதாவது, எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை.