அ.தி.மு.க கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையடுத்து கரூர் நகர அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
காளையை பட்டியலில் யார் சேர்த்தது?. 2004 ம் வருடம் தி.மு.க ஆட்சி காலத்தில் காட்சிபடுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்த அக்கட்சி, தற்போது போராடுகின்றதே?, மேலும் அந்த பட்டியலில் சேர்த்த விவகாரம் குறித்து மோடி அரசு பரிசீலனை செய்திருக்க வேண்டும், ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இது தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஜல்லிக்கட்டு என்று பலமுறை கடிதம் எழுதினார்கள். தற்போது ஜல்லிக்கட்டிற்கு குழப்பம் நீடிப்பதற்கு காரணம் காங்கிரஸ், தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் நிலவும் குழப்பத்தை தீர்த்து வைக்காமல் வேடிக்கை பார்க்கின்றது என்றார்.