தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம்: தமிழக அரசு அரசாணை

புதன், 5 ஜூலை 2023 (14:12 IST)
சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 
 
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது 
 
இந்த உயர்மட்ட பால திட்டத்திற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்