கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது. அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது போக்குவரத்து செயல்படுவதாக கூறப்பட்டாலும் கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆம், பேருந்துகளில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.