கோவையில் தீ வைக்கப்பட்ட கோயில் – பொதுமக்கள் அதிர்ச்சி!

சனி, 18 ஜூலை 2020 (16:35 IST)
கோவையின் உக்கடம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு தீவைக்கப்பட்ட நிகழ்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் டவுன் ஹால் ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோயிலை இன்று காலை பார்த்த அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் கோயிலின் கூரை முழுவதும் எரிந்து கரிபடிந்து காணப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

கோயிலில் ஏற்பட்ட தீ தன்னிச்சையாக நடந்ததா அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீவைத்தார்களா எனப் போலிஸார் விசாரித்து வருகின்றனர். நேற்று கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இன்று கோயில் தீ விபத்து நடந்திருப்பது கோவை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்