உலகிலேயே மூத்த மொழி தமிழ்தான் என்பது கீழடியில் கிடைத்து கொண்டிருக்கும் ஆதாரங்கள் மெய்ப்பித்து வருவதால் தமிழ் மொழியின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் உலகில் தமிழை விட தெலுங்கு பேசுபவர்களே அதிகம் என தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு சமுதாயத்திற்கு இடையேயான பிணைப்பு குறைந்துள்ளது என்றும், உலகம் முழுவதும் தமிழை விட, தெலுங்கு மொழியை ஒன்றரை கோடி மக்கள், அதிகம் பேசுகிறார்கள் என்றும் தெரிவித்தார். தெலுங்கானா தமிழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.