கர்நாடகா மாநிலம் தலைக்காவிரில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் வருடத்திற்கு 177. 25 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் கர்நாட அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுப்படி மாதம் தோறும் திறந்துவிடப்படும் குறிப்பிட்ட அளவு டிஎம்சி தண்ணீர் அளவு உள்ளதா என்றால், மழை இருந்தால் தான் தண்ணீர் என கர்நாடக அரசு கூறிவருகிறது.
இந்நிலையில், கர்நாடக அரசு, காவேரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்து மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க பலத்த முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆனால் கர்நாடக அரசு கேட்பதாக இல்லை.