வீடு புகுந்து பிளஸ் 1 மாணவி பலாத்காரம்! ஆசிரியர் கைது.!! மேலும் பல பெண்களை சீரழித்ததாக அதிர்ச்சி தகவல்.!!!

Senthil Velan

திங்கள், 8 ஜனவரி 2024 (12:24 IST)
நாகர்கோவிலில் பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங் (32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர், கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கன்னியாகுமரி அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவியும், சுந்தர்சிங் வீட்டு அருகில் வசித்து வருகிறார். ஒரே பகுதி வீடு என்பதால், அடிக்கடி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் சுந்தர்சிங் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. மாணவிக்கு செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சுந்தர்சிங் வாங்கி கொடுத்து உள்ளார்.
 
இந்நிலையில் சுந்தர்சிங் மீது சந்தேகமடைந்த அவரது மனைவி செல்போனை எடுத்து பார்த்துபோது, பிளஸ் 1 மாணவி உட்பட பல இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அருகில் உள்ள பிளஸ் 1 மாணவி வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். 
ALSO READ: 17 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.
 
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் விசாரித்தில், சம்பவத்தன்று டியூசனுக்கு சென்ற மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி காரில் அழைத்து சென்று சுந்தர்சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
அதன்பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சுந்தர்சிங்கை கைது செய்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தபோது, பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 1 மாணவி, அஞ்சுகிராமம் அருகே வசித்து வரும் ஒரு ஆசிரியை மற்றும் பல இளம்பெண்களின் ஆபாச படம் மற்றும் வீடியோ இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சுந்தர்சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
 
இளம்பெண்கள், ஆசிரியைகளிடம் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பலாத்காரம் செய்து வந்ததாக சுந்தர்சிங் கூறி உள்ளார். இவர், ஏற்கனவே நாகர்கோவில் அண்ணா மைதானத்தில் உடற்கல்வி ஆய்வாளராக நியமிக்கப்பட இருந்தார். அவர் மீது அப்போதே புகார்கள் இருந்தது. அரசின் கவனத்துக்கு சென்றதால், நியமனம் ரத்து செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்