டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினை தீருமா ?

வியாழன், 21 ஜூன் 2018 (17:14 IST)
மின் துறை அமைச்சர் தான் எங்கள் டாஸ்மாக் துறைக்கும் அமைச்சராக உள்ளார். அவரிடம் இரண்டாண்டுகளாகியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு இதுநாள் வரை நிறைவேற்றப்பட வில்லை – என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத்தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.





தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்புத்தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவ்து:-

15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை, காலமுறை ஊதிய விகிதம் வழங்கப்படவில்லை, மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு என்பது அவர்களை பொறுத்தவரை அச்சுறுத்தலாகி உள்ளது. உயிரிழந்த டாஸ்மாக் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலையோ., இழப்பீடும் இதுவரை வழங்கப்படுவதில்லை, இது போன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல போராட்டங்களை நடத்தியும், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை.


 
அதுமட்டுமின்றி மேலாண்மை இயக்குநருடன் இரண்டு, மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுநாள் வரை, அந்த கோரிக்கைகளை அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டும், அரசு இதுநாள் வரை எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற வில்லை. ஆகவே, இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்திய பிறகு தற்போது தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வரும் 26 ம் தேதி அன்று 5 மண்டலங்களில் சுமார் ஆங்காங்கே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை திரட்டி, மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென்றும், மேலும், தமிழக மின் துறை அமைச்சர் தான், டாஸ்மாக் நிறுவனங்களின் சார்ந்த துறையின் அமைச்சராகவும் (ஆயத்தீர்வை மதுவிலக்கு அமலாக்கத்துறை) அமைச்சராகவும் உள்ளார். அவரிடம் இரண்டாண்டுகளாக கோரிக்கைகளை முன் வைத்து இதுநாள் வரை அவர் கண்டுகொள்ள வில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்


சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்