டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை உயர்கிறது.. எவ்வளவு? எப்போது முதல்?

Siva

செவ்வாய், 30 ஜனவரி 2024 (06:57 IST)
டாஸ்மாக் மது கடைகளில் உள்ள மதுபானங்களின் விலை பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் உயர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

180 மில்லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களில் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் 180 மில்லி அளவு கொண்ட உயர்ரக மதுபானங்கள் 20 ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 650 மில்லி கொண்ட பீர் வகைகளின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மில்லி, 750 மில்லி, 1000 மில்லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை மற்றும்,  325 மில்லி, 500 மில்லி கொள்ளளவு உள்ள விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கு ஏற்ப கொள்ளளவுக்கு ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்