ஏற்ற இறக்கமின்றி ஒரே இடத்தில் நிற்கும் தங்கம் விலை.. இனிமேல் உயருமா?

Siva

ஞாயிறு, 28 ஜனவரி 2024 (11:16 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இன்றி ஒரு குறிப்பிட்ட விலையில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது. 
 
தங்கம் விலை ஜனவரி 19ஆம் தேதி 5810 என்ற விலையில் ஒரு கிராம் விற்பனை ஆன நிலையில்  அதன் பிறகு கடந்த 10 நாட்களில்  10 ரூபாய் முதல் 30 ரூபாய் மட்டுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 
 
இன்று தங்கம் 5840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது  அதே போல் ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 720 என்று விற்பனை ஆகி வருகிறது.
 
24 கேரட் சுத்த தங்கம் 6310 என்றும்  வெள்ளி ஒரு கிராம் 77.50 மற்றும் ஒரு கிலோ 77 ஆயிரத்து 500 என்று விற்பனை ஆகி வருகிறது 
 
 தங்கம் விலை எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் உயரிம் என்றாலும் இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கமின்றி இதே நிலையில் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்