பாஜக விலகியவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இஸ்லாமிய அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக தமிமுன் அன்சாரி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சட்டமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவர் கேட்டுக் கொண்டபடியே எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இஸ்லாமிய கைதிகள் விவகாரத்தில் பட்டியல் எடுக்கப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் விடுதலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.