திமுகவினர் விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் : ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

புதன், 1 மே 2019 (18:22 IST)
தூத்துக்குடியில் தொகுச-வின் சார்பில்  மே தின பேரணி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் சிவப்புச் சட்டை அணிந்துகொண்டு பங்கேற்றார். அவருடன் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டோர் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தனர்.
பின்னர் அனைவரும் ஊர்வலமாகச் சென்று  மே தின நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினர்.
 
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியதாவது : பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலாளி என்று  கூறிக்கொள்கிறார். ஆனால் திமுக தான் உண்மையான காவலாளி, தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தால் உரிமைகள் வந்துசேரும். தொழிலாளர்களை பாதுகாப்பும்  உண்மையான காவலாளி திமுகதான். பிரதமர் மோடி காவலாளி அல்ல. நாட்டின் களவாணியாக இருந்து கொண்டிருக்கிறர் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் பிரதமரை கள்வாணி என தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம். ஆட்சி  அதிகாரத்தில் ஊழலையும் லஞ்சத்தையும் இரண்டறக்கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மடியில் கனமிருப்பதால்தானே காவலாளி உங்கள் கண்ணுக்கு தெரிகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் பிரதமரை களவாணி என தரம்தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம் ஆட்சிஅதிகாரத்தில்ஊழலையும்லஞ்சத்தையும் இரண்டறக்கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமட்டார்கள் மடியில்கணமிருப்பதால்தானே காவலாளி களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார்?

— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 1, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்