முன்னாள் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (05:49 IST)
திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை எம்பியாக பணியாற்றிய வசந்தி ஸ்டாலின் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 56
 
பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளருமான வசந்தி ஸ்டான்லி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
கனிமொழியின் ஆதரவாளரான இவருடைய மரணம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்தி ஸ்டான்லி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல திமுக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்