சீசனுக்கு முன்னே போட்டு தாக்கும் வெயில்..! – வற்றிய அருவிகள்!

சனி, 19 மார்ச் 2022 (11:52 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பல இடங்களில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இந்த மாத இறுதி முதல் கோடைக்கால சீசன் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சேலத்தின் சில பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசியுள்ளது.

பொதுவாகவே காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கடும் வெயில் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வெயிலிம் கடும் தாக்கம் காரணமாக சாலையோர இளநீர், நுங்கு, தர்பூசணி விற்கும் கடைகள் அதிகரித்துள்ளன. மக்கள் மோர், பானகம், இளநீர், பழச்சாறு போன்றவற்றை அருந்தி தாகம் மற்றும் வெயிலை சமாளித்து வருகின்றனர்.

அதிகரிக்கும் வெயில் காரணமாக குற்றாலம் பகுதிகளில் உள்ள அருவிகள் பல வறண்டுள்ளன. இதனால் அருவிகளுக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்