விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை தரும் தமிழக பட்ஜெட் - எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்!

சனி, 19 மார்ச் 2022 (11:22 IST)
சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு.
 
தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு.
 
சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.
 
வேளாண்துறையில்  முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை.
 
நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
 
விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
 
நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்-  வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
 
தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு மையம் மூலம் 30,000 மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
 
ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், தேக்கு போன்ற மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும்.
 
பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய பயிறு வகைகள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
 
இத்திட்டம் ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்