அரசு கல்லூரிகளில் சேர ஆன்லைன் தளம் தொடக்கம்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

திங்கள், 20 ஜூலை 2020 (08:57 IST)
தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் இணையதளம் இன்று மாலை முதல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென முன்னறிவிப்புகள் ஏதுமின்றி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு முறையை அரசு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வீட்டிலிருந்தபடியே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக அரசு Tngasa.in என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த இணையதளம் மூலமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இன்று மாலை 6 மணிக்கு இந்த இணையதளம் செயல்பட தொடங்கும் என்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்