இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்களை திறந்து கொள்ள அனுமதி அளித்தது, அதை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம், சபரிமலை நிர்வாகம் போன்றவை வழிபாட்டு தலங்களை திறக்க தயாராகியுள்ளன, திருப்பதியில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து 3ம் தேதியன்று தலைமை செயலர் மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் நாளை தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழிபாட்டு தலங்களை நாளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்கவில்லை என அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பது தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.