ஹால்டிக்கெட் வாங்க சிறப்பு பேருந்து – மாணவர்களுக்கு மட்டும் அனுமதி!

ஞாயிறு, 7 ஜூன் 2020 (09:24 IST)
பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில் அதை வாங்க செல்வதற்காக மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகளை அரசு இயக்குவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்த பொதுத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. கூடவே 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நடைபெறாமல் உள்ள தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதை பள்ளிகளில்தான் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், மாணவர்கள் பள்ளிகளுக்கு ஹால் டிக்கெட் வாங்க செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 63 வழித்தடங்களில் 109 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பேருந்துகளில் பள்ளிக்கல்வித்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் எனவும் மாணவர்கள் மட்டுமே இந்த பேருந்துகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இந்த பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்