தமிழகத்தில் தாமரைக்கு வந்தது வாழ்வு – எப்படித் தெரியுமா ?

புதன், 16 ஜனவரி 2019 (11:40 IST)
பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் தாமரை இலைக்கானத் தேவைக் கூடியுள்ளது.

தமிழக அரசு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தி அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனைப் பொதுமக்களும் வரவேற்று செயல்படுத்தியுள்ளதால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.

இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குப் பதில் பாக்குமட்டை, வாழை இலை போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அது போலவே இப்போது புதிதாக தாமரை இலையின் தேவையும்  அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாகத் தாமரை இலைகளைப் பூக்கடைகளில் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது பிளாஸ்டிக் தடையினால் இறைச்சிக் கடைகளில் இறைச்சிகளை தாமரை இலைகளில் கட்டித் தருவதாகவும் இதனால் தாமரை இலைக்கு டிமாண்ட் கூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தாமரை இலை விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்