தமிழ்நாட்டில் பைக் ஓட்டும் பல இளைஞர்களிடம் லைசென்ஸ் இருப்பதே இல்லை. பலர் 18 வயதுக்கு முன்னரே பைக் ஓட்ட தொடங்கி விடுகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகள் பற்றிய சரியான விழிப்புணர்வும் மாணவர்களிடம் இருப்பதில்லை. எனவே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்கள் உரிய லைசென்சை பெற்று பாதுகாப்பாக பயணம் செய்யவும் கல்லூரிகளுக்கே வந்து லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதன்மூலம் விபத்துக்கள் குறையும் என கூறப்படுகிறது. கல்லூரிகளில் சென்று லைசென்ஸ் வழங்கினாலும் மாணவர்கள் பைக்கை சரியாக கையாள்கிறார்களா என்பதை சோதித்த பின்பே வழங்கப்படும். இதனால் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பல நன்மைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது.