திருமண மண்டபம், மைதானங்களில் மது அருந்த அனுமதி! – தமிழ்நாடு அரசு!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:56 IST)
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளிக்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள், தனியார் மதுக்கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அங்கீகாரம் பெற்ற பார்களில் மது அருந்த அனுமதி உள்ளது.

இந்நிலையில் இதுதவிர திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த சிறப்பு அனுமதி வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அரசிதழில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்