தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

சனி, 25 ஏப்ரல் 2020 (15:33 IST)
தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென் மாவட்டங்களில் பிரதான தொழிலாக இயங்கிவரும் தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அதில் பணிபுரிந்துவந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த தொழிலாளர்கள் அரசு தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக அரசு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘இஎஸ்ஐ கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க 2,177 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்