நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்...

புதன், 14 மார்ச் 2018 (18:03 IST)
2018-2019 ஆம் ஆண்டின் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 
 
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாலும், 2019 ஆம் ஆண்டு பாராளுமற்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும், நாளை கூடும் பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நாளைய பட்ஜெட்டை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தாக்கல் செய்ய உள்ளார். 
 
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சபாநாயகர் தனபால் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை பிற்பகலில் நடைபெறுகிறது. அதன் பின்னர், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீது சட்டசபையில் எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்