அமைச்சர்களின் ஆளுமையும், திறமையும் குறைவு: சட்டப்பேரவை லைவ்க்கு அஞ்சுகிறதா ஆளும் அரசு?

ஞாயிறு, 7 ஜனவரி 2018 (11:12 IST)
நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. 
 
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிரது, அதே போல ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. எமவே, தமிழக சட்டசபை நிகழ்வுகளும் ஒளிபரப்ப படவெண்டும் என கோரிக்கை 2012 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. 
 
ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்ப கட்டமாக ரூ.60 கோடி செலவாகும். எனவே, நேரடி ஒளிபரப்பு என்பது இயலாத காரியம் என்று நிராகரிக்கப்பட்டது. சட்டமன்ற கூட்டத்தொடரை கேப்டன் தொலைக்காட்சி மூலம் இலவசமாக ஒளிபரப்பத் தயாராக உள்ளோம் என்று விஜய்காந்த தெரிவித்திருந்தார். ஆனால், இதுவும் நிராகரிக்கப்பட்டது.
 
இந்நிலையில், நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், அரசின் ஆளுமையையும், அமைச்சர்களின் திறமைகளையும் உறுப்பினர்களின் வாதத்திறன் குறைவாக இருப்பதினால் அரசு லைவ் கொடுக்க அஞ்சுகிறதா? என்று கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
 
மேலும், எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, அவரது தொலைக்காட்சி கேப்டன் டிவி மூலமாக இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக இருப்பதாக கூறிய பின்னும் தமிழக அரசு அக்கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை. அரசின் ஆளுமையையும், அமைச்சர்களின் திறமைகளையும் உறுப்பினர்களின் வாதத்திறன் குறைவாக இருப்பதினால் அரசு அஞ்சுகிறதா?” என்று கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
 
பணம்தான் சிக்கல் என்றால் எளிமையாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் அல்லது தூர்தர்ஷன் பொதிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இனியும் அற்ப காரணங்களைக் காரணம்காட்டி காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்