வினாத்தாள் ஒன்றில் சாதிய பாகுப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், அது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள்தான் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க அந்த வினாத்தாள் கேந்திரிய வித்யாலயா பள்ளியுடையது கிடையாது என்றும், சிலர் சாதி, மத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த பதிவுக்கு கீழே பலர் ஆதரவாகவும், எதிராகவும் கமெண்டுகளை இட்டு வருகின்றனர். பாஜக எழுதியுள்ள பதிவில் “தமையன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமையன் என்றால் சகோதரன் என்று பொருள். தனயன் என்றால்தான் மகன். எனவே சொற்பிழை இல்லாமல் கிண்டல் செய்யவும் என சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.