குரூப் - சி எனப்படும் துறைசார்ந்த ரயில்வே பொதுப்போட்டித் தேர்வை தமிழில் நடத்த தேவையில்லை என ரயில்வேதுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில்வே தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய ரயில்வே வாரியம் தமிழைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.பி கனிமொழி தலைமையில், சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ,இன்று, திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
ஆளும் மத்திய அரசு, ஒரு மொழியை அழித்துவிட்டால். அதன் இனத்தை அழித்துவிடாலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. அதனால் தமிழைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். போர்களத்தில் திமுகவினர் பின்வாங்கியவர்கள் அல்ல... அதனால் மற்ற மாநிலத்தின் மொழிகளைக் காக்கவும் திமுக., போராடி வருகிறது என தெரிவித்துள்ளார். இபோராட்டத்தின் போது, திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.