கோமாளித்தனம் காட்ட இது நேரமல்ல! காங்கிரஸ் – பாஜக ட்விட்டரில் மோதல்!

வியாழன், 5 மார்ச் 2020 (10:44 IST)
பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறும் வகையில் ராகுல் காந்தி பதிவிட அதை தொடர்ந்து பாஜக – காங்கிரஸ் இடையே ட்விட்டரில் மோதல் எழுந்துள்ளது.

சமீபத்தில் தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி தான் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து சிந்தித்து வருவதாக கூறினார். இதற்கு பலரும் ’ட்விட்டரிலிருந்து வெளியேற வேண்டாம்” என பிரதமர் மோடியை குறிப்பிட்டு ஷேர் செய்து வந்தனர்.

பிரதமர் மோடியை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ”இந்தியா கொரோனா வைரஸால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது. அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ட்விட்டர் கணக்கை வைத்து விளையாடாதீர்கள்” என குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்க களம் இறங்கிட தமிழக பாஜக ”உங்கள் இத்தாலிய குடும்பத்தை காக்க இத்தாலிய பிரதமருக்கு அறிவுரை கூறுங்கள். உங்கள் கோமாளித்தனங்களை காட்ட இது நேரமல்ல” என பதிவிட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக இறங்கிய தமிழக காங்கிரஸ் “நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையை கருத்தில் கொள்ளாமல் ட்விட்டரிலிருந்து வெளியேற யோசிக்கும் பிரதமர், தனது பதவியிலிருந்து விலகி விடலாமே” என்று பதிவிட இரு தரப்பினருக்கு இடையேயும் ட்விட்டரில் மோதல் வலுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்