தமிழ்நாடு பட்ஜெட் 2021-22! – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:38 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

அதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்புகளை வாசித்து வருகிறார்.

அதன்படி, அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடியும், தொல்லியல் துறைக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு

ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது ₹10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்

கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கீடு

செம்மொழி கலைஞர் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்; பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்

உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்