அதேபோல், கர்நாடகாவில் அடுத்து தேர்தல் வருவதால், பெங்களூர் சார்ந்து சில நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களுக்கு பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் “இது ஆரோக்கியமான பட்ஜெட். நாடு மட்டுமல்ல வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட பட்ஜெட் இது. மேலும், இந்த பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் இல்லை. அதானியோ, அம்பானியோ மட்டும் பயனடைவர் எனக் கூறும்படி இல்லாமல், சிறு குறு தொழில் செய்யும் மக்களுக்கும் உதவியான பட்ஜெட்” என கருத்து தெரிவித்துள்ளார்.