ஒருசிலரின் லாபத்திற்காக நடைபெறும் தீக்குளிப்பு சம்பவங்கள்: தமிழிசை

திங்கள், 16 ஏப்ரல் 2018 (08:03 IST)
தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் காரணங்களுக்காகவும், சமூக காரணங்களுக்காகவும் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் மரணம் அடைகின்றனர். சமீபத்தில் வைகோவின் உறவினர் மற்றும் தொண்டர் என இருவர் அடுத்தடுத்து தீக்குளித்து மரணம் அடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னை அருகே காட்டாங்குளத்தூர் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த 47 வயது எஸ்.ரமேஷ் என்ற திமுக தொண்டர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திடீரென தீக்குளித்தார். ரமேஷின் உடலில் 30 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் இவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெருகி வரும் தீக்குளிப்பு சம்பவங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, 'தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் தேவையற்றது என்றும், ஒரு சிலரின் லாபத்திற்காக இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்