ரஜினியுடனான சந்திப்பில் என்ன நடந்தது? தமிழருவி மணியன் பேட்டி!

புதன், 2 டிசம்பர் 2020 (13:40 IST)
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது என தமிழருவி மணியன் பேட்டி. 
 
அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என ரஜினிகாந்த் சமீபத்தில் கூறிய நிலையில் சென்னை போயஸ் இல்லத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினி ஆலோசனை நடத்த்தினார். 
 
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பின்வருமாறு பேசினார்... ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது. அவரது அரசியல் வருகை குறித்து புதிதாக நான் சொல்ல எதுவும் இல்லை. அவரது உடல்நிலையை பார்த்துக்கொள்ளுமாறும், அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும்படியும் கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்