தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

Siva

புதன், 16 ஜூலை 2025 (07:48 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
புகாரில், ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் அலுவலகம் அருகே ஆயுதங்களுடன் கூடிய நபர்கள் நடமாடி கொண்டிருப்பதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி அலுவலகத்தை நோட்டமிட்டுள்ளதாகவும், அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது பதில் சொல்லாமல் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு முறையும் ஆட்டோவில் வருபவர்கள் நோட்டமிட்டு சென்று வருவதாகவும், மூன்று முறை ஆட்டோக்களில் சிலர் வந்து நோட்டமிட்டு சென்றது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கொடியுடன் கூடிய கார் ஒன்று அலுவலகம் அருகே நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், உளவு நடவடிக்கைகளுக்காக இருக்கலாம் என்று கவலைப்படுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து ஆதவ் அர்ஜுனாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஒரு விசாரணை நடத்தி அறிக்கையை தயாரித்துள்ளதாகவும், அந்த அறிக்கையும் புகாருடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்