நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும் அச்சமடைந்துள்ள நிலையில், பாஜக நிர்வாகி சரத்குமார் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கூட்டத்தை விட தனக்கு 1996 ஆம் ஆண்டு அதிக கூட்டம் கூடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருச்சியில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூடிய கூட்டம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்குமார் பதிலளித்தார். அப்போது அவர், "1996-ல் நானும் இதுபோன்று கூட்டங்கள் கூட்டியிருக்கிறேன். விஜய்யின் கூட்டத்தை விட எனக்கு அப்போது அதிக கூட்டம் கூடியது. ஆனால், அப்போது சமூக வலைதளங்கள் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "நான் 'நாட்டாமை', 'சூர்யவம்சம்' போன்ற வெற்றி படங்களை அளித்த பிறகுதான் அரசியலுக்கு வந்தேன். சினிமாவில் இருந்து ரிட்டர்யடு ஆகிவிட்டு நான் அரசியலுக்கு வரவில்லை" என்றும் அவர் கூறினார்.