நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதன் அலுவலகங்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளுவரில் அமைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அலுவலகத்தை, நெடுஞ்சாலை துறையினர் அகற்றியுள்ளனர். அந்த கட்டிடம், நெடுஞ்சாலைத் துறையின் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகம் மட்டுமின்றி, அந்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளையும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர். அந்த செயலின் ஒரு பகுதியாகவே, தமிழக வெற்றி கழக அலுவலகத்தையும் ஜேசிபி மூலம் இடித்துள்ளனர்.