தமிழ் மாணவர் ஜி.யு. போப் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24)!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:03 IST)
கனட நாட்டில் உள்ள பிரின்ஸ் எட்வெர்ட்  என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர். இவர், கடந்த 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாளில் (இன்று)  பிறந்தார்.

இவர் கனடாவில் இருந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தார்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.

அதன்பிறகு, 1886-ம் ஆண்டு திருக்குறளின் சுவையை அறிந்து அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். பின்னர், புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.

தமிழ் மீது அவரது ஆர்வம் பெருகவே  அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ்க்கு பெரும் தொண்டாற்றினார்.

சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.யு. போப் தனது கல்லறையில்’’ ஒரு தமிழ் மாணவர் இங்கு உறங்குகிறான் ’’என்று பொறிக்கப்பட வேண்டும் என்று எழுதுமாறு கூறியவர் தன் 88-ம் வயதில் காலமானார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்