பொங்கல் பண்டிகையின் போது நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பொருட்களை வைத்து கொடுக்கப்படும் துணிப் பையில், இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் என அச்சிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இதனால் மீண்டும் மாறுகிறதா தமிழ் புத்தாண்டு தேதி எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை மாதம் 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார்.