வங்க கடலில் உருவானத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி! – வானிலை ஆய்வு மையம்!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:03 IST)
வங்க கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன.

இந்நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்