அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிக்கொண்டே இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:13 IST)
வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிக்கொண்டே இருக்கும் என்பதால் அடுத்த 25 முதல் 30 நாட்களுக்கு தீவிர மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

அடுத்த 25 முதல் 30 நாட்களுக்கு வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் சென்னை முதல் நாகை வரையிலான கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் டிசம்பர் இரண்டாம் தேதி வரை மழை இருக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.  

நாகை முதல் சென்னை வரையிலான பகுதிகள் தான் மழைக்கான ஹாட்ஸ்பாட் பகுதி என்றும் இங்கு மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நவம்பர் 14ஆம் தேதி முதல் மழை தீவிரமாகும் என்றும் நவம்பர் 14, 15 ஆகிய இரண்டு நாட்களும் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நாகை. மயிலாடுதுறை. காரைக்கால். புதுச்சேரி, கடலூர். விழுப்புரம்.  செங்கல்பட்டு. சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்