நாளை வரை சென்னையில் கனமழை பெய்யும் என்றும் அதன்பிறகு சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றும் இன்றும் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் சென்னையில் மழை குறைந்து அதற்கு பதிலாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.