13 தேதி வரை மழை - வானிலை மையம் தகவல்!

வியாழன், 9 செப்டம்பர் 2021 (14:04 IST)
மத்திய வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதோடு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகிற 13 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்