கொரோனா எதிரொலி: சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகள்

வியாழன், 9 செப்டம்பர் 2021 (13:02 IST)
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை பின்வருமாறு...
 
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல், பொது இடங்களில் விழா கொண்டாடுதலுக்கு தடை. 
 
2.  விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கூட்டமாக சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை. 
 
3. தனி நபர்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி 
 
4. சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
 
5. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயம், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்