தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

சனி, 28 மே 2022 (14:22 IST)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல். 

 
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே இருந்தது.
 
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் எனவும் 29, 30 ஆம் தேதிகளில் லட்சத்தீவு, கேரளா, தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்